Sunday, January 18, 2009

ஓரிரு நாட்கள் அலுவலக வேலையினால் தாமதமானலும், எல்லோருக்கும் பொங்கல் வாழ்த்துக்களை சொல்லிக்கொள்கிறேன். இல்லாவிட்டால் தமிழை காக்கும் தன்மானத்தலைவர்கள் எல்லாம் கோபித்துக்கொள்வார்கள். தமிழ் புத்தாண்டை வேறு மாற்றி அமைத்துவிட்டார்கள்.  சித்திரை, வைகாசி இல்லை இனி. மக்கள் மாறுவார்களா என்று தெரியவில்லை. "பழையன கழிதலும், புதியன புகுதலும், வழுவில கால வகையினானே" என்பது எல்லோருக்கும் தெரிந்த நன்னூல் விதி. ஆச்சரிய பட தக்கது தமிழ் இலக்கணம். இது இது இப்படிதான் இருக்க வேண்டும் என்று ஒரு விதியை வகுத்து விட்டு, இதுவும் மாற்றத்திற்கு உட்பட்டது என்று வேறு ஒரு விதியை வகுத்து இருக்கிறார்கள். தமிழ் இலக்கணம் Object Orinted Program மாதிரி. புரிந்த மாதிரிதான் இருக்கும்.  ஆகையால் எல்லாம் மாற்றத்திற்கு உட்பட்டதுதான். தமிழ் இலக்கணம் உட்பட.

ஏதோ, லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக வந்து வாழ்த்து சொல்லிவிட்டேன். (தமிழ் இலக்கணம் புரிந்தாலும் புரியலாம். இந்த டயலாக்கிற்கு இதுவரை அர்த்தம் புரியவில்லை!!!)

எல்லோருக்கும் என் இனிய புத்தாண்டு பொங்கல் வாழ்த்துக்கள்.

1 comment:

travel said...

Dear Harish,
As long as Karunanidhi is in power he will climb on roof top and will be yelling. In practice no body is willing this change. Those who are doing it, are doing out of compulsion and fear factor.

I wish and pray that this government to go and we continue to follow the old tradition.

Ramanathan