Thursday, January 13, 2011


ஜோக்கராய் தெரிந்த சுப்ரமணியம் சுவாமி ஸ்பெக்ரம் மூலமாய் ஹீரோவாகி விட்டார். கீழே இணைத்துள்ள விடியோக்களை பார்த்தால், அவர் தெளிவாகத்தான் சொல்கிறார், நமது பகுத்தறிவும்(!) இப்படியும் நடக்குமா என்ற நமது ஐயமும் அவரை ஜோக்கராக்கி விட்டது புரியும். என்ன கண்டு பிடித்தாலும், என்ன JPC வைத்தாலும் இவர்களை ஒன்றும் செய்ய முடியாது என்ற உண்மை கசப்பாய் கசக்கிறது. போர்பொஸ் மூலம் Hindu சர்குலேசனும் அதிகமானதும், வி.பி.சிங் பிரதமரானதும் தான் மிச்சம். -ஹர்ஷத் மேத்தா கேஸ் எங்கே என்று இன்று தேட வேண்டும். தெகல்கி மண்டையை போட்டுவிட்டார் என்பது மட்டுமே நமக்கு தெரியும். சர்காரியா கமிஷன் அறிக்கைக்கு பிறகு மூன்று முறை முதலமைச்சராகிவிட்டார் கருணாநிதி. திருவாரூர் to சென்னை திருட்டு ரயில் நிலையில் இருந்தவர், ஆசியாவின் அதி பணக்காரர் லிஸ்ட்டில் தான் சேர்ந்தது பத்தாது என்று மொத்த குடும்பத்தையும் சேர்த்துவிட்டார். கடுமையான தண்டனை, சதாம் உசேன் மாதிரி நடு வீதியில் தூக்கு என்றானால் குற்றம் கம்மியாகலாம் (சதாம் உசேனின் கதிக்கு அமெரிக்க அரசியல் காரணம் என்பது வேறு விஷயம்)

இந்த விடியோக்களில் பார்ப்பதற்கு ஒன்றும் இல்லை....கேட்பதற்காக மட்டுமே ஏராளமான விஷயம் இருக்கிறது. ஆகையால் வழக்கம் போல் ஆபிஸில் Blog படிக்காமல், வீட்டில் மெதுவாய் இந்த post ஐ படியுங்கள் / கேளுங்கள்...ofcourse பாருங்கள்.

இந்த வார துக்ளக் 'நினைத்தேன் எழுதுகிறேன்' பகுதியில் சோ எழுதியவை இந்த் விடியோக்களுடன் சம்பந்தமாதலால் அது அப்படியே கீழே..

"...ஸ்விட்சர்லாந்த் வங்கிகளில் சுமார் கோடி ரூபாயாக ஆரம்பித்து, இப்போது கோடி ரூபாயாக உயர்ந்திருக்கக் கூடிய கணக்கை, ராகுல் காந்திக்காக சோனியா காந்தி நிர்வகித்து வருகிறார் - என்று குருமூர்த்தி ஒரு கட்டுரையில் எழுதியிருக்கிறார். அதில் 'இந்த விஷயத்தை முன்பு சுப்ரமணியம் ஸ்வாமி எழுப்பினார். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நூரானி இது பற்றி எழுதினார். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ராஜேந்தர் பூரி எழுதினார். பின்னர் நானும் (குருமூர்த்தி) எழுதினேன். ஆனால், ஒருவர் மீது கூட அவதூறு செய்வதாக நடவடிக்கை இல்லையே, ஏன்? அட, எங்கள் மீதுதான் நடவடிக்கை இல்லை என்றால் - இதை முதலில் ஆதாரபூர்வமாட வெளியில் கொண்டு வந்த ஸ்விட்சர்லாந்து நாட்டுப் பத்திரிகை மீதும் ஏன் நடவடிக்கை இல்லை? அவதூறு என்றால் நடவடிக்கை எடுக்க வேண்டியதுதானே? என்று கேட்டிருக்கிறார் குருமூர்த்தி. இது தவிர, ரஷ்ய உளவு ஸ்தாபனமாகிய கே.ஜி.பி., ராஜிவ்காந்தி குடும்பத்தினருக்கும், சோனியா காந்தியின் தாயாருக்கும் பணம் கொடுத்து வந்தது என்று வெளியாகிய தகவலையும் சுட்டிக் காட்டியிருக்கிறார். இதற்கும் ஏன் நடவடிக்கை இல்லை? என்று கேட்டிருக்கிறார்...."



Dr. Swamy on Sonia Gandhi's KGB money



Dr. Swamy on Sonia Gandhi's birthand birth certificate



Dr. Swamy on Sonia Gandhi's citizenship



Dr. Swamy on Sonia Gandhi'seducation



Dr. Swamy on Sonia Gandhi's employment



Dr. Swamy on the role of NRIs and legal opinion



Dr. Swamy on INOC and Sonia Burden of Proof for lawsuit



Dr. Subramaniam Swamy on Sonia's family smugglilng



Dr. Swamy onRahul Gandhi's education & citizenship



Dr. Swamy gives his legal analysis Dr. Swamy gives his legal analysis