சமீபத்தில் என்னை வெகுவாய் பாதித்த மற்றுமொரு விஷயம் இந்த விடியோ. 12-11-08 அன்று சென்னை சட்டக்கல்லூரியில் நடந்த நிகழ்வு. செய்தி பழசாகிலும் இந்த காட்சிகளை பார்க்கும் துர்-வாய்ப்பு கிடைத்தது இப்பொழுதுதான். நம் சமூகத்தின் பல பகுதிகள் இன்னமும் காட்டுமிராண்டி கூட்டமாய்தான் இன்னமும் இருக்கிறது என்பதற்கான சாட்சி.
கைகட்டி நின்ற காவல்காரர்களை சொல்லுவதா? இல்லை கை வலிக்கும் வரை அடித்தவர்களை சொல்லுவதா? என்ன வேண்டுமானாலும் செய்திருக்கலாம் அதற்காக இப்படியாய் அராஜகம் செய்வது!!! தெருவில் விழும் மனிதனை தூக்கிவிடும் நம் மனது கூட, கடமை இருக்கும் இவர்களிடம் இல்லையே என்ற மலைப்பு ஏற்பட்டது. படித்தவன் அயோக்யத்தனம் செய்தால் அய்யோ என்று போவான் என்று சாபமிட்டு சாதாரணமாய் செத்துப்பொன மஹாகவியை நினைதத பொழுது நம்மால் எதுவும் செய்ய இயலாது என்ற நிதர்சனம் உரைத்தது. இவர்கள் இப்பொழுதுதான் படிக்க ஆரமித்து இருக்கிறார்கள்.
ஜெயா டிவி இதை அவர்கள் பிரசாரத்திற்கு உபயோகப்படுத்தி கொண்டாலும் அந்த இருவர் வாங்கிய அடி நிஜம். நம்மால் எதுவும் செய்ய இயலாது என்ற நிதர்சனம் புரிந்து போனதால், அடுத்த நாள் செய்ய வேண்டிய வேலையான டாட் நெட்டும், டேடாபேசும் மனதை நிறைத்தன
No comments:
Post a Comment