தனிமை.... ஊரையும் உறவையும் விட்டு ஓடி வந்துவிட்டாலும் அயர்ச்சியும் ஆயாசமுமாய்
ஒதுங்கி நிற்கும் போதுதான் தனிமையின் சுமை அதிகமாய் உணரப்படுகிறது. உள்ளுரிலேயே
உறவுகளுடன் இருந்தபோதிலும் 90களில் தனிமையின் சுமையால் பொதிமாடாய் ஊரெங்கும்
சுற்றித்திரிந்து இருக்கிறேன். தனிமையை விரட்டுவதாய் நினைத்து சைக்கிளை விரட்டியதே
அதிகம்.
தனிமை எப்பொழுதுமே சுகமான சுமைதான். ஒடிக்கொண்டிருக்கும் ஒட்டத்தைப்பற்றியும் தூரத்துப் புள்ளியாய் தெரியும் கனவுகளைப்பற்றியும் கவலைப்படாமல் களித்திருப்பது தனிமையில்தான். கண்ட கனவுகள் கானல் நீராய் போனதும், காதலாகி கசிந்துருகி கண்ணீர் மல்கி களித்த நாட்கள் கணப்பொழுதில் மறைந்து போனதும், ஓட்டி உறவாடிய நண்பர்களும் உறவுகளும் உதிர்ந்து போனதும் நினைவில் வர கழிவிரக்கமே மிஞ்சும் தனிமையில்.
தனிமை சூழும்பொழுதெல்லாம் எட்டி எட்டி உதைத்து உற்சாகமாய் வெளிவரவே நான் முயல்கிறேன். பல சமயம் மெல்ல அசை போட்டுப் பார்க்க பழைய நினைவு சுகம் சுழலாய் உள்ளே இழுத்துவிடுகிறது. நினைவுச்சுகம் ஒரு லாகிரி வஸ்து. என்னை அது விரட்ட, நான் அதை விரட்ட முயல்கிறேன் இந்த Blog post மூலமாய்...ஜெயிப்பது எப்பொழுதுமே தனிமைதான்