Wednesday, January 7, 2009

அபியும் நானும் திரைப்படம் நெட்ல் பார்க்க வாய்ப்பு ஏற்பட்டு பார்தேன். பெரும்பாலும் நெட்ல் பார்பதை தவிர்த்து விடுவேன். ஆடியோ/ விடியோ க்வலிடி என்பதுதான் காரணம். தற்சமயம் வேறு வழியில்லை. திருட்டு வீடியோ என்பதால், தயாரிப்பாளரும், படைப்பாளிகளும் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை. கடைதேய்ங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைத்து விட்டார்கள். பசித்தவன் பொறுக்குவது சரியா தப்பா என்று தெரியவில்லை. எந்த லிங்க்ல் படம் பார்த்திர்கள் என்று கேட்க வேண்டாம். அது ஊரரிந்த ரகசியம்.

திரைப்படத்தை பொறுத்தவரை ஒரிரு சினிமாத்தனங்களை தவிர்த்து விட்டு பார்ததால் மிக நல்ல படம். தொடர்சியாய் நல்ல படங்களை கொடுக்க முயலும் இயக்குநரை மனதார பாராட்டலாம்.

No comments: