அமெரிக்க கனவுகள் மிக சுலபம். வாழ்வது தான் கடினம். - ( When you ready to compromise lot of things other than money life is soooo...easy)
Couple of days back i got a chance to read the below intresting facts. Hope you also aware of these.
உலகத்தின் காவல்காரன், பெரியண்ணன் வல்லரசு என்று மார்தட்டிக் கொள்ளும் அமெரிக்காவின் இன்றைய உண்மை நிலை தெரியுமா உங்களுக்கு, இன்று அமெரிக்காவின் ஒவ்வொரு நாளும் 2 பில்லியன் டாலர் கடன் வாங்கி செலவிட்டுத்தான் கடத்தப் படுகிறது. அமெரிக்காவில் கடன் இல்லாத எந்த குடிமகனும் கிடையாது என்று சொல்லும் அளவுக்கு எல்லோருமே கடன்காரர்களாக உள்ளனர். அமெரிக்காவில் புழக்கத்தில் உள்ள கடன் அட்டைகள் (தமிழில் கிரெடிட் கார்டுகள்) மொத்தம் நூற்றி ஐம்பது கோடி. அந்த நாட்டின் ஒட்டு மொத்த மக்கள் தொகையே முப்பது கோடிதான். அப்படியானால் சராசரியாக ஒவ்வொரு அமெரிக்கக் குடிமகனும் ஐந்து கடன் அட்டைகளை வைத்துள்ளார்கள் ஒவ்வொரு ஒரு கடன் அட்டைக்கும் எவ்வளவு கடன் இருக்கும் என்று நீங்களே கணக்கிடுங்கள். ஒட்டு மொத்தமாக எல்லா அமெரிக்கக் குடிமகன்கலுமே கடன் வாங்கித்தான் அன்றாட வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கின்றனர். இன்று அமெரிக்கக் குடும்பங்களின் சேமிப்பு மைனஸ் 22 % என்பதில் இருந்து அவர்களின் நிலை உணர முடிகிறது. எந்தக் குடும்பமும் சேமிக்கும் நிலையிலேயே இல்லை, எல்லாக் குடும்பங்களும் கடனில் சிக்கி உழல்கின்றன. 33 மில்லியன் அமரிக்கர்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழும் ஏழைகள். தினந்தோறும் 20 மில்லியன் அமெரிக்கர்கள் பட்டினியால் வாடுகின்றனர். இந்த எண்ணிக்கைகள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளன.
சமூக சீரழிவுகள்:
ஒவ்வொரு இரண்டு நிமிடத்திற்கும் ஒரு பெண் கற்பழிக்கப் படுகிறாள். 20 % பள்ளிச் சிறுமிகள் தாய்மை அடைகின்றனர். பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்படும் பெண்களில் மூன்றில் ஒரு பங்கு ஆறு வயதிற்கும் கீழேயான குழந்தைகள். 15-19 வயதிற்குட்பட்ட இளைஞர்கள் வருடத்திற்கு 3500 பேர் சராசரியாகக் கொலை செய்யப் படுகின்றனர். இந்த வயதை ஒத்த 150,000 இளைஞர்கள் வன்முறைகள் மற்றும் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு ஆண்டு தோறும் கைதாகின்றனர்.
உலகின் அசைக்க முடியாத வல்லரசு என்று தன்னை மார்தட்டிக் கொள்ளும் அமெரிக்காவிற்கு ஏன் இந்த இழிநிலை? உழைத்துச் சேர்த்த சொத்துதானே நிலைக்கும், ஊரை அடித்து உலையில் போட்டவர்கள் எத்தனை நாள் நிம்மதியாக இருந்து விட முடியும். bஅமெரிக்கர்கள் தாங்கள் மற்ற நாடுகளுக்கு எதிராகச் செய்த சதிகள், அராஜகங்கள், அட்டூழியங்கள் ஆகியவற்றின் பலனை இப்போது அனுபவிக்கத் தொடங்கி விட்டனர், தங்களது புத்திசாலித் தனங்களாலும், தங்களுடைய கடினமான உழைப்பாலும் உலகின் ஒரே வல்லரசாக முன்னேறியதாகக் கூறிக் கொள்ளும் அமெரிக்கர்கள் உண்மையிலேயே தங்களின் மேன்மை நிலையை நேர்மையாக அடையவில்லை. ஆரம்பம் முதலே அமெரிக்கர்கள் மற்ற நாடுகளை தங்களின் திட்டமிட்ட சதிச் செயல்களாலும் , மிரட்டல்களாலும், வஞ்சக சூழ்ச்சிகளாலும், உள்நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்துவதாலும் வளர விடாமல் ஒடுக்கும் நடவடிக்கைகளைத் திட்டமிட்டு செய்து வந்தனர். அமெரிக்கர்கள் தங்களுடைய குறுக்குப் புத்தியினால் பெற்ற வெற்றிகளைப் போலவே இன்று அதனாலேயே தங்கள் நாட்டின் பொருளாதாரம் சீர்குலைவதைத் தடுக்க இயலாமல் தவிக்கின்றனர். அவர்களின் சதிச் செயல்கள் பற்றிப் பார்க்கும் முன்னர் அமெரிக்கர்கள் எப்படி இந்த மேன்மை நிலையை அடைந்தார்கள் என்று விரிவாகப் பார்ப்போம்.
அமெரிக்காவின் பொருளாதாரம் சமீபத்தில் நிலை குலைந்த போது அதன் தாக்கம் இன்று உலக நாடுகள் எல்லாவற்றிலுமே எதிரொலிக்கிறது. உலக நாடுகளின் மீது அமெரிக்காவின் அடக்குமுறைகளும், கட்டுப்பாடுகளும் விதிக்கப் படும் பொது அந்த நாடுகளின் பொருளாதாரங்கள் மிகப் பெரிய தேக்க நிலையை அடைகின்றன. உண்மையிலேயே அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் தான் உலகம் இருக்கிறதா? உலகத்தின் பொருளாதாரமே அமெரிக்கர்கள் காட்டும் திசையில்தான் பயணிக்குமா? இன்று உலக நாடுகள் எல்லாவற்றின் மீதும் அமெரிக்காவின் ஆதிக்கம் இருப்பதாகவே உணரப் படுகிறது. உலகத்தின் பொருளாதாரமே அமெரிக்காவின் கையில்தான் உள்ளது என்ற தோற்றம் எப்படி உண்டானது?
அமெரிக்கர்களின் பலம் என்ன?
இயற்கை வளங்கள்: உலகின் ஒட்டுமொத்த இயற்கை வளங்களில் 50 % அமெரிக்காவில்தான் உள்ளது. அதாவது மற்ற எல்லா உலக நாடுகளும் சேர்ந்து எந்த அளவு இயற்கை வளங்களை பெருள்ளனவோ அந்த அளவு இயற்கை வளங்களை அமெரிக்கா மட்டுமே பெற்று அனுபவித்து வருகிறது. மக்கள்தொகை: உலகின் மக்கள்தொகையில் அமெரிக்காவின் பங்கு 4% மட்டுமே. உலகில் உள்ள 50% இயற்கை வளங்களை உலக மக்கள் தொகையில் 4% மட்டுமே உள்ள அமெரிக்கர்கள் அனுபவிக்கின்றனர். மற்ற உலக நாடுகளில் உள்ள 96 பேர் எந்த அளவு இயற்கை வளங்களைப் பயன்படுத்த முடியுமோ , அந்த ளவு இயற்கை வளங்களை வெறும் 4 அமெரிக்கர்கள் மட்டுமே பயன்படுத்திக் கொள்ள முடியும். இந்த ளவு இயற்கை வளங்களைத் தங்கள் கையில் வைத்திருப்பது அமெரிக்காவின் மிகப் பெரிய பலம்.
தங்கம்: உலகின் ஒட்டுமொத்த தங்க இருப்பில் 70% - 80% அளவிற்கு அமெரிக்கர்களின் கட்டுப் பாட்டில் உள்ளது. இன்று பெரும்பாலான நாடுகளில் மிக விலை உயர்ந்த பொருளாக மதிக்கப் படும் தங்கம் நான்கில் மூன்று பங்கு அமெரிக்கர்கள் வசமே உள்ளது. மற்ற நாடுகளின் பொருளாதாரத்தைக் கட்டுப் படுத்துவது: உலக நாடுகள் எல்லாவற்றிலும் அமெரிக்காவின் முதலீடு அதிகமாக இருக்கும் படி செய்வது. உலக நாடுகளில் பெரும்பாலான தொழில்களை அமெரிக்க நிஇருவனன்களே செய்கின்றன, அல்லது அந்த நாடுகளின் முக்கிய நிறுவனங்களில் அமெரிக்காவின் முதலீடு அதிக அளவில் இருக்கும். இப்படிப் பட்ட முதலீடுகள் மூலம் அந்த நாடுகளின் தொளிதுரையைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு அந்த நாடுகளின் மற்ற நிறுவனங்களை நசுக்கி ஒடுக்குவது. இதனால் அந்த நாடுகளின் பொருளாதாரமே இவர்களின்முதலீட்டின் அடிப்படையில் இருக்குமாறு செய்து அந்த நாடுகளைக் கட்டுப் படுத்துவது, அவர்களின் முன்னேற்றத்தை ஒடுக்குவது என்பவை அமெரிக்காவுக்கு சாத்தியமாகிறது.
அமெரிக்காவில் முதலீடு: அமெரிக்காவில் மற்ற நாடுகளின் முதலீடு குறைந்த அளவில் இருக்குமாறு செய்வது. அமெரிக்காவின் மற்றொரு புத்திசாலித் தனமான வஞ்சகத் திட்டம், "மற்ற நாடுகளில் அமெரிக்க முதலீடுகளைக் குவிப்பது எவ்வளவு முஉக்கியமோ அதே போல தனது நாட்டில் மற்ற நாடுகளின் முதலீடுகள் அதிகம் வந்து விடாமல் பார்த்துக் கொள்வது ". இதனால் அமெரிக்காவின் தொழில்துறையும், பொருளாதாரமும் தங்கள் கட்டுப்பாட்டிலேயே வைத்துக் கொள்ள முடியும்.
டாலரை உலக கரன்சி ஆக்கியது: உலக நாடுகளுக்கு இடையேயான வர்த்தக நடவடிக்கைள் அமெரிக்க டாலரை அடிப்படையாகக் கொண்டு நடக்க செய்தது. அமெரிக்க டாலரின் மதிப்பு அவர்களின் தங்கக் கையிருப்பைப் பொறுத்து கணக்கிடப்படும். அதாவது அமெரிக்க பெடெரல் வங்கி தான் மக்களிடையே புழக்கத்தில் விடும் ஒவ்வொரு அமெரிக்க டாலருக்கும் குறிப்பிட்ட அளவு தங்கத்தைக் கையிருப்பில் வைக்கும். அதாவது அந்த டாலரானது கையிருப்பில் வைக்கப்படும் தங்கத்தின் மதிப்பைப் பெரும். ஆனால் மற்ற பெரும்பாலான உலக நாடுகள் தங்கள் புழக்கத்தில் விடும் பணத்தின் மதிப்பிற்கேற்ப டாலரைக் கையிருப்பில் வைக்கின்றன. எனவே ஒவ்வொரு நாட்டின் அந்நியச் செலாவணி (அதாவது டாலர்) கையிருப்பைப் பொறுத்தே அந்த நாட்டின் பணத்தின் மதிப்பு அமைகிறது. இது போல பெரும்பாலான நாடுகளின் பொருளாதாரமே அந்த நாட்டின் டாலர் கையிருப்பைப் பொறுத்துதான் மதிப்பிடப் படுகிறது. இதனால் டாலர் என்பது உலக நாடுகளின் பொருளாதாரத்தில் மிக முக்கியப் பங்கினை வகிப்பது போன்ற நிலையை உருவாக்கி விட்டனர்.
No comments:
Post a Comment